பொழுதுபோக்காக மட்டும் பார்க்கக் கூடாது! இந்தியன் 2 குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

seeman about indian 2

இந்தியன் 2 : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான இந்தியன் 2 படத்தினை பார்த்துவிட்டு மக்கள் மற்றும் திரைபிரபலங்கள், தங்களுடைய விமர்சனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தை பார்த்துவிட்டு இந்தியன் 2 திரைப்படத்தை சமூக மாற்றத்திற்காக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சென்னையில் படத்தினைப் பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் ” நானும் என்னுடைய அண்ணன் கமல்ஹாசனும் ஒரே ஊர் காரர். அவருடைய படங்களை நான் முதல் நாள் முதல் காட்சியை முதல் நாளே என்னுடைய நண்பர்களுடன் சென்று பார்த்திவிடுவேன். இப்போது நான் அவர் நடித்த படத்தை அவருடன் இணைந்து முதல் காட்சியில் நடித்தேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பொதுவாகவே நாம் சினிமாவை பொழுதுபோக்கு என்று நினைக்கிறோம். பொழுதை போக்க அல்ல நல்ல பொழுதாக மாற்றுவதற்கு நல்ல படைப்பு இருக்கிறது. திரைகலை என்பது அறிவியல் முன்பு ஒரு அழகான குழந்தை. குறிப்பாக இந்தியன் படம் திரைக்கதை அமைத்து எடுக்கப்பட்ட படம் என்று சொல்லமுடியாது. அன்றாடம் நாம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய, அவலங்கள் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கிறோம் என்பதை வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது.

படத்தில் தினந்தோறும் நடக்கின்ற பிரச்னைகளை வைத்துள்ளனர். படத்தினுடைய கோட்பாடு அவரவர் வீட்டை சுத்தம் செய்யுங்கள், நாடு சுத்தமாகும் என்பதுதான். இந்த படம் என்ன சொல்கிறது என்றால் நீ உன் வீட்டை சரி செய், ஒரு இந்தியன் தாத்தா ஏன் வரவேண்டும் என்று அனைத்திற்கும் இந்தியன் தாத்தா வர மாட்டார் படத்தைப் பொழுது போக்குக்காக பார்க்காமல், சமூகத்திற்கான மாற்றத்திற்கு ஏற்றவாறு பார்க்க வேண்டும். அதிகாரிகளை சரி செய்து விடலாம், ஆனால் மக்கள் மாற வேண்டும் ஒவ்வொருவரும் ஊழல், லஞ்சத்திற்கு எதிராக மாற வேண்டும்” எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu