எக்காரணத்தையும் காட்டி இலவச மடிக்கணினி, மிதிவண்டி வழங்குதலை கைவிட கூடாது – பாமக ராமதாஸ்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
எக்காரணத்தையும் காட்டி இலவச மடிக்கணினி, மிதிவண்டி வழங்குதலை கைவிட கூடாது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கொரானா வைரஸ் பரவலை காரணம் காட்டி இந்த ஆண்டு தமிழகத்தில் இலவச மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகள் வழங்கக்கூடியது திட்டம் சற்று தளர்ந்து உள்ளதாக வருத்தம் தெரிவித்த அவர், இதுபோன்ற காரணங்களை காட்டி மிதிவண்டி மற்றும் இலவச மடிக்கணினி திட்டங்களை தடை செய்யக்கூடாது எனவும், இது மாணவர்களிடையே தேவையற்ற பதற்றத்தையும் கவலையும் உண்டாக்கி கல்வித் திறனை பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொள்முதல் பணிகளை உடனடியாக தொடங்கி பொங்கல் திருவிழாவில் மாணவ மாணவிகளுக்கு தேவையான மடிக்கணினி மற்றும் மிதிவண்டி ஆகியவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)