விஜயதரணிக்கு போட்டியிட வாய்ப்பு தரக் கூடாது என வலியுறுத்தி சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே காங்கிரஸ் எம்.பி விஷ்ணுபிரசாத், தனது ஆதரவாளர்களுடன் சத்தியமூர்த்தி பவனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முக்கிய நிர்வாகிகள் யாரிடமும் ஆலோசனை செய்யாமல் வேட்பாளர்களைத் தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பிவைத்ததாகவும், கட்சியில் இருந்து விலகி மீண்டும் இணைந்தவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு தர இருப்பதாக அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் விஜயதரணிக்கு போட்டியிட வாய்ப்பு தரக் கூடாது என வலியுறுத்தி சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தாமாதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…