பொங்கல் பரிசுக்கான டோக்கன் கிடைக்கவில்லையா? – தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் மற்றும் ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்திற்காக கடந்த ஜனவரி 7-ம் தேதி முதல் ஜனவரி 9-ம் தேதி வரை டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் ஜன.13-ம் தேதி வரை டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

பொங்கல் பரிசு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!

அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு நியாய விலை கடையில் இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும்  திட்டத்தை தொடங்கி வைத்தார். பொங்கல் தொகுப்பை 13-ம் தேதிக்குள் பெற முடியாதவர்கள் 14-ம் தேதி பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் கிடைக்கப்பெறாத அரிசி குடும்ப அட்டைதாரர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் தொகையை ஜன.13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Recent Posts

இன்று சென்னை vs பஞ்சாப்.., சேப்பாக்கத்தில் விசில் பறக்குமா? பயிற்சியாளர் சொன்ன பாசிட்டிவ் தகவல்.!

சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…

2 minutes ago

விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு.!

விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…

55 minutes ago

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

9 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

10 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

11 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

12 hours ago