கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்ததாக பாஜகவினர் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தொடர்ந்து எழுந்த புகாரை அடுத்து முக்கிய காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் நடைபெற உள்ளது தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்ததாக பாஜகவினர் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சலீவன் விதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தபோது 6 வாகனங்கள், ரூபாய் 45 ஆயிரம் பணம், சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வானதி சீனிவாசனுக்கு வாக்களிக்க கோரி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கலகம் செய்தல், அத்துமீறுதல் மற்றும் கீழ்ப்படியாமை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…