மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் – மக்கள் நீதி மய்யம்

Default Image

டெல்லியில் உள்ள பிபிசி ஊடக அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

bbcoffice

அதில், குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப் படம் வெளியிட்ட பிபிசி நிறுவனத்தின் அலுவலங்களில் ஐடி ரெய்டு நடத்தியுள்ளனர். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், சிபிஐ, வருமான வரி, அமலாக்கத் துறைகள் மூலம் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்கத்தக்கதல்ல.

தவறுகளை சுட்டிக் காட்டுவதும், விமர்சிப்பதும் ஊடகங்களின் பணி. அவற்றை ஏற்று, திருத்திக் கொள்வதுதான் மத்திய அரசுக்கு அழகு. அதைவிடுத்து, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, விமர்சிப்போரின் குரல்வளையை நெறிக்க முற்படுவது ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது.

எதிர்க்கட்சிகள், ஊடகங்களைப் பழிவாங்கும் சர்வாதிகாரப் போக்கை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த சோதனைக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்