இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் – மு.க.ஸ்டாலின்

Default Image

மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு.

மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இதற்க்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து,  மத்திய தொல்லியல்துறை இணை இயக்குனர்  மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில் தமிழ், கன்னடம், மலையாளம், ஒடிஷா உள்ளிட்ட 10 மொழிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘மத்திய தொல்லியல் துறையின் பட்டயப் படிப்பிற்கான தகுதியில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது.  கடும் கண்டனத்திற்குப் பிறகு தமிழ் இணைக்கப்பட்டிருக்கிறது. வரவேற்கிறேன்! மொழிகளே, பன்முகத்தன்மையின் பண்பாட்டு அடித்தளங்கள்! இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை கடைப்பிடிக்க வேண்டாம்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்