திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்- விஜயகாந்த்

Default Image

’திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று தேமுதிக நிறுவன தலைவைர்  விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தேமுதிக நிறுவன தலைவைர்  விஜயகாந்த் பதிவிட்ட பதிவில்,தமிழுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது. ஜாதி, மதங்கள் மற்றும் தலைவர்களின் சிலை வைத்து அரசியல் செய்தது போக, திருவள்ளுவர் சிலையை வைத்து அதன் மூலம் அரசியல் செய்வதை நிச்சயமாக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர்,அவரை வைத்து அரசியல் செய்வதை எந்த கட்சியாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும்.இது மோதல்களையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் ஏற்படுத்த காரணமாகிவிடும். தமிழகஅரசு உடனடியாக கவனம் செலுத்தி,இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் தொடராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்