"அம்மா உணவகத்தில் அரசியல் செய்யாதீர்கள் " – மு.க.ஸ்டாலின்.!

Default Image

அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவுகள் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவுகள் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செய்தியாளர்களுக்கு கொரோனா வந்திருப்பது மனவேதனை தருகிறது.

சுங்க கட்டணத்தை உயர்த்தி இருப்பது மனிதநேயமற்ற செயல், சம்பளம் கொடுக்கவில்லை என்று கரூர் அரசு மருத்துவமனை பணியாளர் போராட்டம் நடத்துவது பரிதாபத்திற்குரியது. குறைந்தபட்சம் அரிசி பெறும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்குமாவது , மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்