சனாதனம் வரலாற்றை திரித்து பேச வேண்டாம்! ஆளுநர் ரவிக்கு அய்யா வைகுண்டர் தலைமைபதி கண்டனம்

R.N.Ravi: மனுதர்மத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர் அய்யா வைகுண்டர் எனவும் வரலாறு தெரியாமல் வாய் திறக்கக் கூடாது என்றும் ஆளுநர் ரவி பேசியதற்கு அய்யா வழி தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி கண்டனம் தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்டரின் 192 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பேசினார்.

அவர் பேசும் போது, “அய்யா வைகுண்டர் தோன்றிய சமூக காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலகட்டம். சனாதன தர்மத்தை காக்கவே அய்யா வைகுண்டர் தோன்றினார்” என பேசியிருந்தார். அவருடைய பேச்சுக்கு அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read More – 5 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடக்கம்!

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், யாருடைய சுயலாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூறக் கூடாது. ஆளுநர் அவரது வேலை என்னவோ அதை மட்டும் பார்த்தால் போதும். மனுதர்மத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர் அய்யா வைகுண்டர். வரலாறு தெரியாமல் வாய் திறக்கக் கூடாது அய்யா வைகுண்டர் சனாதானத்தை வளர்ப்பதாக தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல ஆலோசனைகள் கூறுவதை விட்டுவிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஆளுநர் ரவியின் வேலையா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்