வெளியே வராதீங்க…”மழை” பெய்யும்…”வெயில்” கொளுத்தும்…சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட்.!!

Default Image

இன்று மட்டும் நாளை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் எனவும், வெப்பநிலை இயல்பிலிருந்து அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வெயில் :

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தினம் தினம் அதிகரித்து வரும் நிலையில், பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. இந்நிலையில், இன்றும் -நாளையும்  தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மழை :

  • தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காரணமாக 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்களில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது மிதமான மழை பெய்யக்கூடும்.
  • 21 -ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
  • 22,23 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)
Red Alert - Heavy Rains
Tamilnadu Speaker Appavu
parliament winter session 2024