வாட்ஸாப்பில் வரும் ஊரடங்கு வதந்திகளை நம்ப வேண்டாம் – ராதாகிருஷ்ணன்!
வாட்ஸாப்பில் வரும் ஊரடங்கு வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அண்மையில் செய்தியாளரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனா தடுப்பு பணிகள் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், கொரோனா மட்டுமல்லாமல் மழை காலத்தில் ஏற்படக்கூடிய டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் தடுப்பு பணிகளும் விரைவாக நடைபெறுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மத்திய அரசால் தென்னிந்தியப் பகுதியில் மழை காலங்களில் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் ஊரடங்கு குறித்து வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வரக்கூடிய தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.