உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொருளாதாரம், பங்கு சந்தை உள்ளிட்டவைகள் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனிடையே சமூக வலைதளத்தில் கொரோனா பற்றிய வதந்திகள் பரவி வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய மாநில அரசுகள், இன்னும் அதிகமாக போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கொரோன தொடர்பான அறிவியல் ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, யாரேனும் கொரோனா வைரஸ் பற்றி வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ, வேறு எந்த வடிவிலோ பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…
மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…