“பயப்பட வேண்டாம் ..இயற்கையான நிகழ்வு தான்” – தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி!
பருவமழை காலத்தில் மழை பொலிவு என்பது இயற்கையான ஒரு நிகழ்வு தான் இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழநாட்டில் பருவமழை என்பது தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட வாரியாக பல முன்னேற்பாடுகள் எடுத்து வருகின்றனர்.
அதிலும், குறிப்பாக பாதிப்படையும் இடங்களில் இந்த முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். மேற்கொண்டு பாதிப்புகள் ஏதேனும் ஏற்படுமாயின் அதற்கு தொடர்பு கொள்வதற்கு புகார் எண்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால், சென்னை உட்பட பல மாவட்டங்களில் உள்ள மக்கள் மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அச்சத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இன்று வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவரான பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.
அதில், அவர் இது குறித்து அவர் பேசுகையில், “பருவமழை காலத்தில் மழை பெய்வது இயற்கையான நிகழ்வு என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அந்தந்த பகுதிகளில் உள்ள கட்டமைப்பை பொறுத்தே மழையால் ஏற்படும் பாதிப்பு என்பது இருக்கும்.
மேலும், அதி கனமழை என்றால், எல்லா பகுதிகளிலும் அப்படி அதிகனமழை பெய்யாது. அப்படியே மழை பெய்தாலும், அந்தப் அந்தப் பகுதிக்கு ஏற்றவாறு அது மாறுபடும். அக்.16-ல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
அது போல அக். 16ம் தேதி ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 22 செ.மீ. மழை பெய்யும். அதுவும் அனைத்து இடங்களிலும் பெய்யும் என்று சொல்லிவிட முடியாது. பரவலாக மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யலாம்.
அதுபோல ஓரிடத்தில் 6 செ.மீ,. மழை பெய்தால் மிதமான மழை, 7 முதல் 11 செ.மீ. வரை பெய்தால் கனமழை என்றும், 12 முதல் 19 செ.மீ. மழை பெய்தால் மிகக்கனமழை என்றும், 20 செ.மீ.க்கும் மேல் மழை பெய்தால் அது அதிகனமழை என்றும் குறிப்பிடுவோம். ஒரு பகுதிக்கு கனமழை என்பது முற்றிலும் மாறுபடும். எனவே சராசரியாகத்தான் எங்களால் சொல்ல முடியும்.
தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்றால் அது தமிழகம் முழுவதும் பெய்யும் என்று அர்த்தமல்ல, ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பது தான் தகவல். எனவே, சென்னை என்றால் ஒட்டுமொத்த சென்னை என நினைத்து மக்கள் பயப்படத் தேவையில்லை”, என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாலச்சந்திரன் பேசி இருந்தார்.