உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது -நீதிமன்றத்தில் வழக்கு
- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
- ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.தற்போது ஊரக உள்ளாட்சிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த மனுவை வருகின்ற 30ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.