அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி!
இன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகளின் செய்தி தொகுப்புகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை : அமெரிக்க தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று நிறைவடைந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் குடியரசு கட்சி வேட்பளரான டொனால்ட் டிரம்ப் தொடர் முன்னிலை வகுத்து வந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ் நியூஸ் அறிவித்துள்ளது.
சுமார் 51% வாக்குகளை பெற்றுள்ள நிலையில், அவரது வெற்றி உறுதியானதாக ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெற்றி பெற தேவையான 270 எலக்டோரல் வாக்குகளில் 248 வாக்குகளை டிரம்ப் பெற்றுவிட்டார். எஞ்சியுள்ள மாகாணங்களிலும் முன்னிலை வகிக்கித்து வருகிறார். தொடர் பின்னடைவில் இருந்து வரும் கமலா ஹாரிஸ் 214 வாக்குகளை பெற்றுள்ளார்.