சொல்வதை செய்வது கருணாநிதி பாலிசி, சொல்லாததையும் செய்வது ஸ்டாலின் பாலிசி – முதல்வர் மு.க.ஸ்டாலின்
சொல்வதை செய்வது கருணாநிதி பாலிசி, சொல்லாததையும் செய்வது ஸ்டாலின் பாலிசி என முதல்வர் பேச்சு.
நாளை மறுநாள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில், இன்றுடன் தேர்தல் பிரச்சாரமும் நிறைவடைகிறது.
ஸ்டாலின் பாலிசி
இந்த நிலையில், இன்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், சொல்வதை செய்வது கருணாநிதி பாலிசி, சொல்லாததையும் செய்வது ஸ்டாலின் பாலிசி என தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவிலேயே கொள்ளையடிச்சவங்க அவங்க, அதற்கு காரணமானவங்க ஜெயிலுக்கு போவது உறுதி. அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவிற்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.