இதனை செய்தால் கடையின் உரிமை ரத்து செய்யப்படும் – அமைச்சர் நாசர் எச்சரிக்கை

Default Image

ஆவின் நிறுனத்தில் மற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, அமைச்சர் எச்சரிக்கை.

ஆவின் கடைகளில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும் என்றும் மற்ற பொருட்கள் விற்பனை செய்தால் கடையின் உரிமை ரத்து செய்யப்படும் எனவும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்தார். இதனிடையே, தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளை செய்து வருகின்றது.

பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந் நிறுவனத்தில் தற்போது பால் விற்பனையுடன் மோர், தயிர், வெண்ணெய், நெய், லஸ்சி, பனீர், யோகர்ட், பாதாம் பவுடர், உலர் பழ கலவை, குலாப் ஜாமுன் மிக்ஸ், பால் பவுடர், ஐஸ் கிரீம்கள், சாக்லெட்கள், குலாப் ஜாமுன், பால்கோவா, பால்பேடா, மைசூர்பாகு, ரசகுல்லா, டீ-காபி, பேவர்டு மில்க், மில்க்ஷேக், வே டிரிங் போன்ற பல வகையான பால் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இருப்பினு, ஆவின் நிறுனத்தில் மற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆவின் கடைகளில் மற்ற பொருட்கள் விற்பனை செய்தால் கடையின் உரிமை ரத்து செய்யப்படும் அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்