#எல்லாம் உயிர்தாங்க-வயிற்றில் இறந்த 4குட்டிகள்..போராடிய தாய்!காப்பாற்றிய கருணை மக்கள்!
மதுரையில் 2 நாட்களாக தன் குட்டிகளை ஈன்றெடுக்க முடியாமல் தவித்து வந்த தெரு நாயை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கால்நடை மருத்துவமனையில் சேர்த்த நெகிழ்ச்சியாக நிகழ்வானது அனைவர் மத்தியிலும் மனிதத்தை நினைவு கூர்ந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை வளர்நகர் பகுதியில் கர்ப்பமான நாய் ஒன்று தன் குட்டிகளை ஈன்றெடுக்க முடியாமல் சிரமப்பட்டு அங்கு திரிந்தது. நாயின் வேதனையைக் கண்டு கருணையுள்ளம் கொண்ட சிலர் அதனை மீட்டு மதுரை செல்லூர் மாநகராட்சி தெருநாய் கருத்தடை கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர்.
டாக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், தெருநாயைப் பரிசோதனை செய்தனர். அதில் நாயின் வயிற்றில் 8 குட்டிகள் இருந்ததும், அதில் 4 குட்டிகள் இறந்துவிட்டதால் குட்டிப்போட முடியாமல் நாய் தவித்துள்ளது தெரியவந்தது.இதனால் உடனே தாமதிக்காமல் மருத்துவர்கள் உடனே, அறுவை சிகிச்சை செய்து, நாயின் வயிற்றில் இறந்த 4 குட்டிகளை வெளியே எடுத்தனர். அதன்பிறகு உயிருடன் இருந்த மற்ற 4 குட்டிகளையும் எடுத்து, அந்த குட்டிகளையும் அதன் தாய் நாயையும் காப்பாற்றினர்.தெரு நாய் தானே என்று நினைக்காமல் எல்லாம் உயிரும் ஒன்று தானே என்ற அப்பகுதி மக்களின் கருணை உள்ளத்தை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.