சனாதனத்தை குறிக்கிறதா விஜயின் “G.O.A.T” டைட்டில்.? விசிக எம்.பி அதிர்ச்சி பதிவு.!
விஜயின் G.O.A.T பட தலைப்பு சனாதனத்தை குறிக்கும் வகையில் இருக்கிறது என விசிக எம்.பி ரவிக்குமார், தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை : விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள G.O.A.T திரைப்படத்தை அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். படத்திற்க்கு நல்ல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது ஓர் ‘சனாதன’ விமர்சனம் அரசியல் களத்தில் இருந்து வந்தது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
G.O.A.T பட தலைப்பு சனாதன கொள்கையை உயர்த்தி பிடிப்பது போல உள்ளது என அரசியல் களத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் விமர்சனம் செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார். G.O.A.T படைத்தலைப்பின் முழு அர்த்தம் ” The Greatest of all time” இதனை குறிப்பிட்டு தான் ரவிக்குமார் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
Read more – அப்போ துப்பாக்கி இப்போ ‘GOAT’…அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்!
G.O.A.T – சனாதனம் :
அவர் பதிவிடுகையில், ” விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’ உள்ளது The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தாகும். ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதான் அர்த்தம். ‘என்றும் மாறாதது’ என்பதுதான் ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்.இந்த கருத்தை தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு G.O.A.T என வைத்தார்களா?” என குறிப்பிட்டு, ” எல்லாச் சொல்விற்கும் ஒரு பொருள் உள்ளது.” என பதிவிட்டுள்ளார் விசிக எம்.பி ரவிக்குமார்.
விஜயின் கருத்து :
நடிகராக மட்டுமல்லாமல் விரைவில் முழுநேர அரசியல்வாதியாக மாறவுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தற்போது ஓர் அரசியல் ‘எதிர்’ கருத்தை சந்தித்துவிட்டார். ஆம், விஜயின் மேடை பேச்சுக்களில், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா ஆகியோரது கருத்துக்களை படியுங்கள் என வலியுறுத்தி வருகிறார்.
அரசியல் களத்தில் விஜய் :
மேற்கண்ட தலைவர்கள் அனைவருமே சனாதன எதிர்ப்புகளில் மிகத் தீவிரமாக செயல்பட்டவர்கள். அப்படியிருக்க விஜயின் மேடை பேச்சுக்களில் ஒரு கருத்தும், பட தலைப்பில் மாற்றுக் கருத்தை கூறியது போல தற்போது அரசியல் களத்தில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.
நடிகர் விஜய் இதனை வேண்டுமென்றே செய்திருக்க மாட்டார் என கூறினாலும், கள அரசியலுக்கு வரவுள்ள விஜயின் ஒவ்வொரு நகர்வும் இனி ஆராயப்பட்டு பேசுபொருளாவது உறுதி. அதனை எதிர்கொள்ள த.வெ.க தலைவராக விஜய் தயாராக வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?
The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா?
‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்!
‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய்… pic.twitter.com/hJceOJVjYM
— Dr D.Ravikumar (@WriterRavikumar) September 5, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025