பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க இந்த அரசுக்கு தெரியாதா? – அமைச்சர் மனோ தங்கராஜ்
பாஜக ஆளும் பல்வேறு பகுதிகளில் சாதாரண மக்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக ஆளுநரிடம் புகார் அளித்ததாக தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ், ‘தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு சரியான பாதுகாப்பு வழங்கவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். “பாஜக ஆளும் பல்வேறு பகுதிகளில் சாதாரண மக்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை; தமிழ்நாட்டில் அண்ணாமலை போல வெறுப்பு பிரச்சாரம் செய்பவர்களுக்கு கூட பாதுகாப்பு உள்ளது. பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க இந்த அரசுக்கு தெரியாதா?’ என பதிவிட்டுள்ளார்.
பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க இந்த அரசுக்கு தெரியாதா? ” 2/2@annamalai_k
— Mano Thangaraj (@Manothangaraj) November 30, 2022