முதல்வரின் அதிகாரத்தை ஆளுநர் பறிக்க முயற்சிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதய அறுவை சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து, காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே, செந்தில் பாலாஜியின் துறைகள் 2 அமைச்சர்களுக்கு மாற்றியிருப்பாத ஆளுநருக்கு முதல்வர் கடிதம் எழுந்திருந்தார்.
முதலமைச்சரின் பரிந்துரை கடிதத்திற்கு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிய ஆளுநர். பரிந்துரை கடிதத்தில் முதலமைச்சரின் காரணத்தை misleading & incorrect என ஏற்க மறுத்துள்ளார் ஆளுநர். மேலும், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருப்பதை ஏன் குறிப்பிடவில்லை எனவும் ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, முதலமைச்சரின் பரிந்துரை கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், முதல்வரின் அதிகாரத்தை ஆளுநர் பறிக்க முயற்சிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ கூறுகையில், அரசியலமைப்பு சட்டப்படி மாநில அமைச்சர்கள் நியமனம், இலாகா மாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டியது முதல்வரின் அதிகாரமாகும். ஆளுநர் இதில் தலையிட அரசியல் சட்டத்தில் இடமில்லை.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 163-ன் படி அமைச்சரவையில் ஆலோசனை, வழிகாட்டுதலின்படி ஆளுநர் கடமையாற்ற வேண்டும். இலாகா மாற்றம் குறித்த முதல்வரின் பரிந்துரைக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பியது கண்டனத்துக்குரியது. முதல்வர் பரிந்துரை பேரில் அமைச்சரவையில் மற்ற உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். முதல்வர் மீண்டும் கடிதம் அனுப்பினால் அதை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளிக்க வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…