ஆளுநரிடம் இதற்கு ஆதாரம் இருக்கிறதா…? – திண்டுக்கல் லியோனி

leoni

திண்டுக்கல் லியோனி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆட்சியர்கள் முன்னிலையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் அந்தந்த மாவட்டத்தை சார்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். வர இயலாதவர்கள் வீட்டிற்கு சென்று சிறப்பு செய்யப்படுகிறார்கள்.

இந்த சூழலில் ஆளுநர் ஆதாரம் இல்லாத குற்றசாட்டை முன்வைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆளுநர் இப்படி சொல்வது எங்களுக்கு நல்லதாக தான் தெரிகிறது. அதனால் தான் முதல்வர் அவர்கள், இந்த ஆளுநரே தொடர்ந்து இருக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சொல்ல சொல்ல, மக்களுக்கு உண்மையை எடுத்து சொல்வதற்கான வாய்ப்பை அவர் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். எனவே இந்த ஆளுநரை தொடர்ந்து இருப்பது நல்லது. ஆளுநர் திராவிடம் என்கின்ற பழுத்த மரத்தின் மீது, போய் என்கின்ற கற்களை வீசி அந்த மரத்தை எப்படியாவது கீழே தள்ளிவிட வேண்டும் என முயற்சிக்கிறார். ஆனால் கற்களை வீச வீச திராவிட சிந்தனைகள் என்கின்ற கனிகள் மக்களை சென்றடைகிறது.

 விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதனை தெரிந்துகொள்ள, தம்பி அண்ணாமலை 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். இதனை அவர் தொடர்ந்து படித்தால் சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறுகள் தெரியவரும். சுதந்திரபோராட்ட வீர்ரகளை ஜாதிய தலைவர்களாக சித்தரிப்பது மிகவும் தவறு என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்