“விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசுக்குத் திட்டம் இருக்குமோ?” – கமல்ஹாசன்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 1ம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.610 லிருந்து ரூ.660 ஆகவே உயர்ந்த நிலையில், மீண்டும் எண்ணெய் நிறுவனங்களின் நடவடிக்கையால் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.50 உயர்ந்து, ரூ.660 லிருந்து ரூ.710 ஆக உயர்ந்துள்ளது. 15 நாட்களில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 உயர்ந்துள்ளது என்பது கிறிப்பிடப்படுகிறது.
இதுகுறித்து முக ஸ்டாலின் 15 நாள் இடைவெளியில் உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலை ரூ.100-ஐ திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்திருந்தார். உயர்த்தப்பட்ட விலையை திரும்ப பெற்று முந்தைய விலையிலேயே சிலிண்டரை விநியோகிக்க வேண்டும். கொரோனா சூழலில் விலை உயர்வு நெருக்கடிகளை மக்கள் மீது திணிக்காமல் இருப்பதே ஆட்சியாளர் கடமை. இல்லாவிட்டால் தாய்மார்களின் கோபத்திலிருந்து ஆட்சியாளர்கள் தப்ப முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஸ்டாலினை தொடர்ந்து, தற்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விலை உயர்வை குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கூடிக் குறைவது, குறைந்து கூடுவது அன்றாட தங்க விலை. கூடிக்கொண்டு மட்டுமே போவது அத்தியாவசியமான கியாஸ் விலை. விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசுக்குத் திட்டம் இருக்குமோ? என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.
கூடிக் குறைவது, குறைந்து கூடுவது அன்றாட தங்க விலை. கூடிக்கொண்டு மட்டுமே போவது அத்தியாவசியமான கியாஸ் விலை.
விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசுக்குத் திட்டம் இருக்குமோ?
— Kamal Haasan (@ikamalhaasan) December 16, 2020