ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? – கமல்
ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீப நாட்களாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து உச்சத்தை தொட்டு வருகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திலேயே சிலிண்டர் விலை ரூ.100 உயர்ந்து, தற்போது ரூ.810 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில். கண்ணுக்கெட்டாத் தொலைவில் பறப்பவை எவை என்கிறீர்களா? பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டுக்கும் பக்கத்தில் பறப்பது சமையல் எரிவாயுதான். ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? அந்த நெருப்பு ஆபத்தானது என கூறியுள்ளார்.
கண்ணுக்கெட்டாத் தொலைவில் பறப்பவை எவை என்கிறீர்களா? பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டுக்கும் பக்கத்தில் பறப்பது சமையல் எரிவாயுதான். ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? அந்த நெருப்பு ஆபத்தானது.
— Kamal Haasan (@ikamalhaasan) February 25, 2021