பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் வழங்குகிறார்களா ? முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் வழங்குவதாக மு.க.ஸ்டாலின் கூறியது பொய்யான குற்றச்சாட்டு என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு ஆகப்போகும் நிலையில் தற்போது பொங்கல் பரிசு ரூ.2500 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். காலம் கடந்தேனும் மக்களுக்கு உதவி கிடைக்கிறதே என்பதில் மகிழ்ச்சிதான்.ஆனால் அரசு கஜானா நிதியை அ.தி.மு.க.வினர் கையாள்வது ஏன்? அ.தி.மு.க.வினரின் தலையீட்டை முதலமைச்சர் திரு. பழனிசாமி தடுத்து நிறுத்த வேண்டும். ரேசன் கடை ஊழியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே சட்டமன்ற தேர்தல் குறித்து வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் இன்று நாமக்கல்லில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.அப்பொழுது அவர் பேசுகையில், பொங்கல் பரிசுத்திட்டம் பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இந்த திட்டம் நிறைவேறிவிட்டால் அரசுக்கு நல்லபெயர் வந்துவிடும் என்ற எண்ணத்தில் இந்த திட்டத்தை நிறுத்த திமுக சூழ்ச்சி செய்கிறது.மேலும் பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் வழங்குவதாக ஸ்டாலின் கூறியது பொய்யான குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளார்.