மோடிக்கு இதையாவது கண்டிக்க துணிவிருக்கிறதா? – எம்.பி.ஜோதிமணி
சீனா என்ற பேரை உச்சரிக்கவே பயப்படும் மோடிக்கு இதையாவது கண்டிக்கும் துணிவிருக்கிறதா?
அமெரிக்காவில் வரும் 3-ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக, ஜோ பைடன் போட்டியிடுகிறார். இதனையடுத்து, இவர்கள் இருவரும் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒருவரையொருவர் மாறி, மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இருவருக்கும் இடையே நேரடி விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா மீது சில குற்றசாட்டுகளை வைத்தார். இதுகுறித்து, காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘மோடி ட்ரம்பை அழைத்து வந்து கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்து கொரொனாவை கண்டுகொள்ளாமல் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நடத்தினார்.இன்று இந்தியா அசுத்தமான நாடு என்று சேறுவாரி இறைக்கிறார் ட்ரம்ப். சீனா என்ற பேரை உச்சரிக்கவே பயப்படும் மோடிக்கு இதையாவது கண்டிக்கும் துணிவிருக்கிறதா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.