#BREAKING: எஸ்.பி வேலுமணி மைத்துனர் வீட்டில் ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை -லஞ்ச ஒழிப்புத் துறை..!
கோவை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மைத்துனர் சண்முகராஜா இல்லத்தில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் சான்று வழங்கிவிட்டு சென்றனர்.
அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து வேலுமணி தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 35 இடங்களில் நடத்தி வருகிறது. அதில் கோவை மாநகரில் 25 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 10 இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை புறநகர் குட்பட்ட மதுக்கரையில் அதாவது முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மைத்துனரும், கோவை மாவட்ட மதுக்கரை நகர அதிமுக செயலாளராக உள்ள சண்முகராஜா இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், கோவை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மைத்துனர் சண்முகராஜா இல்லத்தில் நடந்த சோதனை நிறைவுபெற்றது. 7 மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் சான்று வழங்கிவிட்டு சென்றனர்.