உயிர் காக்கும் மருத்துவர்களும் தெய்வங்கள் தான் – எடப்பாடி பழனிசாமி
உயிர் காக்கும் மருத்துவர்களும் தெய்வங்கள் தான் என எடப்பாடி பழனிசாமி ட்வீட்.
இன்று உலக மருத்துவர் தினம் கொண்டாடப்படும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘“உயிர் கொடுத்த பெற்றோர் தெய்வங்கள் என்றால், உயிர் காக்கும் மருத்துவர்களும் தெய்வங்கள் தான்” அத்தகைய போற்றத்தக்க பணிசெய்யும் மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர் தின நல்வாழ்த்துகள், அல்லும் பகலும் மக்களுக்காக தன்னலம் கருதாமல் மகத்தான மருத்துவ சேவையாற்றும் அனைத்து மருத்துவர்களின் தியாகத்தை இந்நாளில் போற்றி வணங்குகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
“உயிர் கொடுத்த பெற்றோர் தெய்வங்கள் என்றால், உயிர் காக்கும் மருத்துவர்களும் தெய்வங்கள் தான்” அத்தகைய போற்றத்தக்க பணிசெய்யும்
மருத்துவர்கள் அனைவருக்கும் #தேசியமருத்துவர்தினம் நல்வாழ்த்துகள்,அல்லும் பகலும் மக்களுக்காக தன்னலம் கருதாமல் மகத்தான மருத்துவ சேவையாற்றும் அனைத்து… pic.twitter.com/TGWz38YxeN
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 1, 2023