குணமடைந்த 74 வயது மூதாட்டிக்கு பழக்கூடை கொடுத்து வழியனுப்பி வைத்த மருத்துவர்கள்.!

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 21 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்திருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று முன்தினம் வரை 19 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று மேலும் 2 பேர் வீடு திரும்பியுள்ளதாக கூறினார். இதில் ஒருவர் 74 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த மார்ச் 26ம் தேதி பொழிச்சலூரை சேர்ந்த 74 வயது மூதாட்டி மூச்சுத்திணறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் தற்போது அவர் முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார். மேலும் குணமடைந்த மூதாட்டிக்கு மருத்துவக் குழுவினர் பழக்கூடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர் என ராஜீவ் காந்தி மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025