தமிழக மருத்துவர்களை இந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள் என்று கூறியது கண்டனத்துக்குரியது என ஆயுஷ் அமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடிதம்.
இந்தி தெரியவில்லையென்றால், கூட்டத்தைவிட்டு வெளியேறுங்கள் என்று ஆயுஷ் அமைப்பின் செயலர் ராஜேஷ் கோட்சே கூறியிருப்பது கண்டத்துக்குரியது என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மத்திய ஆயுஷ் அமைச்சர், ஸ்ரீபட் நாயக்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தமிழக ஆயுஷ் மருத்துவர்கள் கலந்து கொண்ட தங்கள் துறை சார்ந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இந்தி மொழியைப் தெரியாவிட்டால் வெளியேறுங்கள் என்று கூறப்பட்ட சம்பவத்தை மிகுந்த துயரத்துடன் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். அதுவும், ஆயுஷ் துறையின் செயலாளரே இவ்வாறு பேசியிருப்பது வருந்தத்தக்கது என கூறியுள்ளார்.
இந்தி பேசாத மருத்துவர்களிடம் மொழித் திணிப்பைச் செய்வது ஏன் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. முதலில் தமிழ்நாடு எந்த இந்திய மொழிக்கும் எதிரானது இல்லை என்பதைப் பதிவுசெய்ய விரும்புகிறேன். ஆனால், எந்தவிதமான வகையிலும், எந்த மொழியையும் எங்கள்மீது திணிப்பதையும் கடுமையாக எதிர்ப்போம். மேலும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும்படியான ஆயுஷ் செயலாளரின் நடவடிக்கை, எனக்கு உருவாக்கியிருக்கும் ஏமாற்றத்தையும், அதற்கு எதிரான எனது கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கவே இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்று மருத்துவர்களுக்கு என்று விட்டுவிட்டால், நாளை ஒட்டுமொத்த 8 கோடி தமிழர்களுக்கும் இந்த அவமானம் ஏற்படுத்தப்படும். அதனால், இத்தகைய சர்ச்சைகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமைச்சகத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜோதிமணி, தமிழக மருத்துவர்கள் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலரால் ஹிந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள் என்று அவமதிக்கப்படுகின்றனர். தமிழகமே கொந்தளிக்கிறது. தமிழக முதல்வர் வாய் மூடி மௌனம் காக்கிறார். இது தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானம் அல்லவா? இந்த அடிமை ஆட்சியால் என்ன பயன்? என கூறியுள்ளார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…