நன்றி மறவோம்!!வர கூடாது என்று தடுக்கும் அவர்கள் .!இன்று மாலை.,5 மணிக்கு..கூறுவோம் மனதார நன்றி!

Default Image

இன்று மாலை 05.00 மணிக்கு வீட்டின் நுழைவு வாயிலில் நின்று கைதட்டல் மூலமோ, மணியோசை எழுப்பியோ நன்றியை வெளிப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (மார்ச்.,22 ) இந்தியா முழுவதும் சரியாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கிட்டத்தட்ட அதாவது 14 மணி நேரம் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த 4 ஆவது வாரத்தில் கொரோனா 3 ஆவது நிலையை அடைவதிலிருந்து தடுக்க இன்று சுய ஊடரங்கு கடைபிடிக்க  படுகிறது.அதன்படி இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதை அடுத்து  மக்களின் நடமட்டமின்றி காணப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் உள்ள கடைகள், டாஸ்மாக் கடைகள் இயங்கவில்லை. அது போல் மெட்ரோ ரயில் பயணிகள் ரயில், பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆட்டோ, கால் டாக்சி, லாரிகளும் ஓடாது. விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

என்ற போதிலும் அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனைகள், மருந்து கடைகள் போன்றவை இன்று திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.அதே போல் பள்ளி, கல்லூரிகள், மால்கள், தியேட்டர்கள், கோயில்கள், சுற்றுலா தலங்கள் போன்றவைகளும் மார்ச்., 31ஆம் தேதி வரை மூடப்பட்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு தொடங்கியது.அதன் ஒரு பகுதியா அனைத்து சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் அரிதாகி உள்ளது.இதே போல் சென்னையில் அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டுவிட்டது.பொதுமக்களும் பொறுப்போடு இந்த சுய ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர் என்பதற்கு தலைநகர் டெல்லி முதல் கன்னியகுமரி வரை வெறிச்சோடி கிடக்கும் சாலைகளே சாட்சியாக கருதலாம்.இந்நிலையில் எங்கும் காணப்படும் மக்களின் நடமாட்டம் இன்றி சாலைகளும் பிற இடங்களும் கடும் அமைதியாக காணப்படுகிறது.

நாம் வைரஸ் தொற்று தாக்கி விடக்கூடாது என்று அதனை தடுக்க போராடி கொண்டிருக்கிறோம் மருத்துவபணியில் இருக்கும் மருத்துவர்கள் வைரஸின் வீரியம் அறிந்தும் அதனை தடுக்கவும் அதன் பாதிப்பில் இருந்து மக்களையும் பாதித்த நபரையும் காக்க சாவோடு தினமும் போராடி வருகின்றனர்.இவர்கள் மட்டுமன்றி சுகாதாரத்துறை பணியாளர்கள் அவர்களின் சேவை ஒரு படி மேல் என்பதை உள்ளம் இம்மியாளவும் மறுக்காது.இவர்களின் பணி மற்ற நாட்களில் இருப்பதை காட்டிலும் தற்போது மிக சவாலான பணி என்பதை யாரும் மறுக்க முடியாது.இந்நிலையில் இவர்களை சிறப்பிக்கும் வகையில் பிரதமர் மோடி ஒரு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.அதன் படி நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் அனைவரும் இன்று மாலை 05.00 மணிக்கு வீட்டின் நுழைவு வாயிலில் நின்று கைதட்டல் மூலமாகவோ அல்லது மணியோசை எழுப்பியோ தங்களது நன்றியை வெளிப்படுத்துங்கள் என்று  பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்