மருத்துவப்பணியின் முக்கியத்துவம் கருதி அரசு மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த வகையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,சிறப்பு குறை தீர்க்கும் முகாம்கள்’ நடத்தி மக்கள் குறைகளை தீர்க்கப் போகிறோம் என புது வேடமணிந்திருக்கும் முதலமைச்சர் அவர்கள், குறைகளை தீர்த்து வையுங்கள் என போராட்டம் நடத்திவரும் அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும். மருத்துவப்பணியின் முக்கியத்துவம் கருதி அரசு மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…