மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவு!
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ பணிகள் இயக்குநருக்கு அறிவுறுத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் ஆணையிட்டுள்ளது. குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பின் முறையாக தையல் போடாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை தொடர்ந்து மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. குடியாத்தம் தாலுக்கா செம்பள்ளியை சேர்ந்த கோகிலா என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.