கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்து நல்லடக்கம் செய்யப்பட்ட மருத்துவரின் சைமனின் உடலை இடமாற்றம் செய்ய வாய்ப்பில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த 19 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவர் சைமன் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய சென்ற இடத்தில பொதுமக்கள் இங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வேறு இடத்திற்கு சென்று மருத்துவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து கீழ்பாக்கம் கல்லறையில் கணவரின் உடலை மறு அடக்கம் செய்ய கடந்த 22 ஆம் தேதி மருத்துவரின் மனைவி ஆனந்தி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சுகாதார வல்லுநர்கள் அடங்கிய குழுவின் அறிக்கையில் படி மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. மேலும் மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தியின் கோரிக்கையை ஏற்பது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…