சசிகலா உடல்நிலை சீராக உள்ளதால் ஐசியூ வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற பெங்களூரு மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பெங்களூர் மருத்துவமனையில் ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவ கல்லூரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் சசிகலாவிற்கு கொடுக்கப்படும் ஆக்சிஜன் அளவு 3 லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், சசிகலாவுக்கு கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்துள்ளது. சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால் சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனையை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மருத்துவமனை அறிக்கையிலும் ஐசியூவில் கண்காணிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.
கொரோனா காரணமாக சசிகலாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு 6வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலாவின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் சுவாசிக்கும் திறன் சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…