மருத்துவர் உயிரிழப்பு வேதனையளிக்கிறது..இனியும் அலட்சியம் கூடாது – முக ஸ்டாலின்
3 நாட்களில் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும் என முதல்வர் தெரிவித்த நிலையில், தினந்தோறும் தொற்று அதிகரித்து வருவது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது – முக ஸ்டாலின் அறிவுப்பு.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு மருத்துவர் நேற்று பலியாகி இருப்பது வேதனையளிக்கிறது என்று இரங்கல் தெரிவித்துள்ளார். பின்னர் மக்களை காக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார். இனியும் அதிமுக அரசு அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டிய அவசர நிலையையே இது உணர்த்துகிறது என்று பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து, 3 நாட்களில் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும் என முதல்வர் தெரிவித்த நிலையில், தினந்தோறும் தொற்று அதிகரித்து வருவது அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டினார். மருத்துவரின் உயிரிழப்பு என்பது வைரஸ் பரவலை தடுப்பதில் அதிமுக அரசு சிறுத்தும் அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டிய அவசரத்தையும், அவசியத்தையும் வலியுறுத்திக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் விரைவு பரிசோதனை கருவிகள் மூலம் மிக பரவலான சோதனைகள் நடத்தி, தொற்றின் அளவை மதிப்பீடு செய்து அதனடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் #COVID19-க்கு மேலும் ஒரு மருத்துவர் பலியாகி இருப்பது வேதனையளிக்கிறது. மக்கள் நலன் காக்கப் பணியாற்றும் காவல்துறையினர், ஊடகத்தினருக்கும் #CoronaVirus தொற்றி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதிமுக அரசு அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டிய அவசர நிலையையே இது உணர்த்துகிறது! pic.twitter.com/hRTZE31GkN— M.K.Stalin (@mkstalin) April 20, 2020