மருத்துவர்கள் தினம் – முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து.!
இன்று மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
டாக்டர் பிதான் சந்திர ராய் ராயின் பிறந்த நாளான ஜூலை 1, தேசிய மருத்துவர்கள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டாக்டர் பிதான் சந்திர ராய் இந்தியாவின் பெருமைக்குரிய மருத்துவ மேதை என்றே சொல்லலாம். இந்நன்னாளை முன்னிட்டு பல அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், தனது தன்னலம் கருதாது உலகத்து உயிர்களின் உடல்நலனும் உள்ளநலனும் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் தின வாழ்த்துகள். மருத்துவர்கள் நலனுக்கான அனைத்தையும் கழக அரசு செய்துகொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தன்னலம் கருதாது உலகத்து உயிர்களின் உடல்நலனும் உள்ளநலனும் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் #DoctorsDay வாழ்த்துகள்!
மருத்துவர்கள் நலனுக்கான அனைத்தையும் கழக அரசு செய்துகொடுக்கும். pic.twitter.com/ul6OfQxJJD
— M.K.Stalin (@mkstalin) July 1, 2023