மருத்துவர்களும் மற்றும் பிற களப்பணியாளர்களும் அச்சப்பட தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு எழுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்களும் மற்றும் பிற களப்பணியாளர்களும் அச்சப்பட தேவையில்லை என்றும் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களை இறைவனுக்கு நிகராக கருதுகிறோம் என கூறியுள்ளார். கொரோனாவால் இறந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே நடந்ததுபோல் நடக்காமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றும் தன்னலம் கருதாமல் காக்கும் பணியில் ஈடுபட்டு இன்னுயிரை துறப்போருக்கு தகுந்த மரியாதை தாருங்கள் என கூறியுள்ளார். இதற்குமுன் ட்விட்டரில் பதிவு ஒன்று போட்டுள்ள முதல்வர், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த மருத்துவரின் உடல் அடக்கத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி, அடக்கம் செய்யவிடாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அடக்கம் செய்ய வந்த ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து முதல்வர் பதிவில், நம்மை பாதுகாக்க போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில் அவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மனவருத்தமளிக்கிறது என்றும் நாம் அனைவரும் அவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென கேட்டு கொள்கிறேன் என முதல்வர் பதிவிட்டுள்ளார். இதனிடையே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…
டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…