கலாமின் கனவை நனவாக்கும் பட்டதாரி ஆட்டோ ஓட்டுனருக்கு டாக்டர் பட்டம்…!

Default Image

கலாமின் கனவை நனவாக்கும் பட்டதாரி ஆட்டோ ஓட்டுனருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்த, உலக அமைதி பல்கலைக்கழகம்.

ராமநாதபுரம் மாவட்டம் ஓம் சக்தி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாகுல்ஹமீது இவருக்கு வயது 33. இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி ஆவார். ஆட்டோ டிரைவராக உள்ள இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பசுமை இந்தியா கனவை நிறைவேற்ற தொடர்ந்து தனது சொந்த முயற்சியில் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.

தனது உழைப்பில் ஒரு பங்கை மரக்கன்றுகளை நடுவதற்கு  செலவிடுகிறார். இவர் இதுவரை 1.25 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உள்ளார். சாகுல் ஹமீது டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நம் உரிமை அனைத்து வாகன ஓட்டுநர் நல சங்க மாநில தலைவராகவும் உள்ளார்.

இவரது இந்த செயலைப் பாராட்டி, உலக அமைதி பல்கலைக்கழகம் இவருக்கு  டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. தமிழகத்தில், டாக்டர் பட்டம் பெற்ற முதல் ஆட்டோ ஓட்டுநர் என்ற பெருமையை சாகுல் ஹமீது பெற்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்