கிண்டி அரசு மருத்துவர் பாலாஜி டிஸ்சார்ஜ்!

கத்தி குத்துவால் பாதிக்கப்பட்ட கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன் சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

Guiindy Doctor Balaji

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன் என்பவரை கடந்த நவம்பர் 13ஆம் தேதி விக்னேஷ் எனும் இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்தினார்.

தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக விக்னேஷ் கூறியதாக தகவல்கள் வெளியாகின. தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் குற்றவாளி விக்னேஷ் கைது கிண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

கத்தி குத்துவால் பாதிக்கப்பட்டு கிண்டி அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பாலாஜி இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஜே.ஜே நகரில் உள்ள அவரது வீட்டில் சிறிது நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்