வெளிநாடு சென்று பணிபுரிய ஆசையா…? உங்களுக்காக ஒரு அரிய வாய்ப்பு…!

Published by
லீனா

வெளிநாட்டில் பணிபுரிய விரும்புபவர்கள், தங்களது விபரங்களை பதிவு செய்யுமாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டில் பணிபுரிய விரும்புபவர்கள், தங்களது விபரங்களை பதிவு செய்யுமாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர்.C.N.மகேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவுரைபடியும் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படியும் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழக மக்களுக்கு உடனடியாக அயல் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என முனைவர். சிநமகேஸ்வரன் இஆப, நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து வெளிநாட்டில் பணி அமர்த்த பல்வேறு நாடுகளின் ஆட்சேர்ப்பு நிறுவனங்களை தொடர்பு கொண்டதில் தற்போது கீழ்கண்ட பணியிடங்களுக்கு தேவைப்பட்டியல் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  1. இங்கிலாந்து நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாத ஊதியம் ரூ.200.000 முதல் ரூ.250.000 வரை சம்பளம் பெறுமானம் உள்ள படிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்/பெண்) 300 முதல் 500 செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

2. பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்ற 30 வயது முதல் 43 வயதுக்குட்பட்ட GCC) ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு குவைத் நாட்டில் பணிபுரிய தேவைப்பட்டியல் வந்துள்ளது. மாத ஊதியமாக ரூ.27,000/-முதல் ரூ.34,500 வரை வழங்கப்படும்.

3 அரபு உணவு வகைகள் சமைக்க ஆண் சமயல்காரர்கள் தேவை பட்டியல் பெறப்பட்டுள்ளது. சமையலருக்கு மாத ஊதியம் ரூ.37,000 வழங்கப்படும்.

4 குவைத்நாட்டில் வீட்டில் வேலை செய்ய 30 வயது முதல் 40 வயது வரை பெண் பணியாளர்கள் தேவை பட்டியல் பெறப்பட்டுள்ளது. மாத ஊதியம் ரூ.29,640 – முதல் ரூ.32,000/- வரை வழங்கப்படும். 5 Diploma in Mechanical Engineer/ITI Fitter தேர்ச்சி பெற்ற 22 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட Casting Inspection/Machine operator |Automobile Foundry) பணிபுரிய ஓமன்நாட்டிற்கு தேவை பட்டியல் வந்துள்ளது. மாதஊதியம் ரூ.29,000/- வழங்கப்படும்.

மேற்படி சம்பளம் சேர்க்காமல் பணியாளர்களுக்கு உணவு, இருப்பிடம் தனியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப்பயணச்சீட்டு ஆகியவைகள் அந்நாட்டின் வேலையளிப்பவரால்  இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும்.

இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான  காலி பணியிடங்கள் குறித்த விவரங்கள், இந்நிறுவன வலைதள பக்கமான www.zimchanpow.er.com-ல் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படும். எனவே வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்கள் இந்நிறுவன வலைதளத்தில் தங்கள் விபரங்களை   கேட்டுக்கொள்ளப்படுகிற

மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. (044-22505886/ 22502267).

மேற்காணும் வேலைவாய்ப்பு விவரங்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்டவேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டடுள்ளது என்றும் முனைவர் சி ந. மகேஸ்வரன் இஆப், அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.com-ல் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவர் எண்.RC.NoB. 0821/CHENNALCORPN/1000.5/308/84 ஆகும்.

மேலும் தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டுவேலைவாய்ப்பு நிறுவனம் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் சுரண்டல்களிலிருந்து வெளிநாட்டு வேலைநாடுநர்களை பாதுகாக்கவும் மற்றும் குறைந்த செலவில் பணியமர்த்துவதற்காகவும் 1978-ம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்,

இந்நிறுவனம் வெளிநாட்டு வேலைக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு சான்றிதழ் சான்றொப்பம், விசா பெறுவதற்கு உதவிபுரிதல் மற்றும் வெளிநாடு செல்வதற்கு தேவையான பயண ஏற்பாடுகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை செய்துவருகிறது. இந்நிறுவனம் இதுவரை 10.350 நபர்களை பல்வேறு வெளிநாட்டு வேலைகளில் பணியமர்த்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தேவைப்படும் மனிதவளத்தினை அளிப்பதற்கும் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று  இந்நிறுவனம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. என்றும் முனைவர்.சி.ந.மகேஸ்வரன் இஆப அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

மாணவி பாலியல் விவகாரம் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…

5 minutes ago

திருவாதிரை களி ரெசிபி அசத்தலான செய்முறை இதோ..!

சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி  ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…

22 minutes ago

தனுஷ் – நயன்தாரா வழக்கு… இறுதி விசாரணையை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…

34 minutes ago

கிளப்பில் கலக்கும் யாஷ்… பிறந்தநாள் ட்ரீட்டாக வெளிவந்த ‘டாக்ஸிக்’ க்ளிம்ப்ஸ் வீடியோ!

சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…

36 minutes ago

பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாட்சி சம்பவம் தான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில்,  அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…

1 hour ago

‘3 மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை’ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…

2 hours ago