வாரிசு டிக்கெட் இலவசமாக வேண்டுமா..? அப்ப இதை பண்ணுங்க..! – விஜய் மக்கள் இயக்கம்
விஜய் ரசிகர்கள் ரத்த தானம் செய்தால் வாரிசு திரைப்பட டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அறிவிப்பு.
எட்டு ஆண்டுகளுக்கு பின் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித்தின் துணிவு திரைப்படமும், நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் இன்று வெளியானது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் திரையரங்குகளில் படத்தை கண்டுகளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், விஜய் ரசிகர்கள் ரத்த தானம் செய்தால் வாரிசு திரைப்பட டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பின்படி இரத்ததானம் செய்து விஜய் ரசிகர்கள் பலர் இலவச டிக்கெட்டை பெற்றுச் சென்றனர்.