மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா? என்று ரஜினிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி.
கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது.இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட 500 வீடீயோக்களை நீக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்,கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து ,பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.இனிமேலாவது மதத்துவேசமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்..ஒழியனும் .எல்லா மதமும் சம்மதமே , கந்தனுக்கு அரோகரா என்று பதிவிட்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,திரு. ரஜினிகாந்த் அவர்களே தமிழகத்தில் பிற்படுத்தப்ப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்70% இந்திய அளவில் 52%. அவர்களின் இடஒதுக்கீட்டை ரத்துசெய்திருப்பதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவில் மண் அள்ளிப் போட்டிருக்கிறது பிஜேபி அரசு.
அவ்வப்போது கருத்துச் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ள உங்களுக்கு இது பற்றி கருத்தே இல்லையா?அல்லது மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…