வரும் சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் அதிக சொத்துக்கள் வைத்துள்ள கோடீஸ்வர வேட்பாளர்களின் பட்டியல் தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை 7,121 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுவில் தங்களின் சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில் தமிழகத்தில் அதிக சொத்துக்கள் வைத்துள்ள வேட்பாளர்களின் பட்டியல் தெரியவந்துள்ளது. அதன்படி, அம்பாசமுத்திர தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையாவின் சொத்து மதிப்பு ரூ.246.73 கோடி, சென்னை அண்ணா நகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் சொத்து மதிப்பு ரூ.211 கோடி, எம்கே மோகனின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் ரூ.41 கோடி உயர்ந்துள்ளது.
இதையடுத்து கோவை தெற்கில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.176 கோடி,அக்கட்சியின் சிங்காநல்லூர் வேட்பாளர் மகேந்திரனின் சொத்து மதிப்பு ரூ.161 கோடி இருப்பதாக கூறப்பட்டது. கடந்த 2016 தேர்தலில் வெற்றி பெற்ற செல்வந்தர்களின் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக தேர்வான மறைந்த வசந்தகுமார் எம்பி ரூ.337 கோடி சொத்துக்கள் வைத்திருந்தார்.
மேலும் சென்னை அண்ணா நகர் தொகுதி திமுக எம்எல்ஏ எம்கே மோகன் ரூ.170 கோடி சொத்துக்களும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும்போது ரூ.113 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக வேட்புமனுவில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…