கொடியை அறிவித்த பின் தவெக தலைவர் விஜய் எங்கு சென்றிருக்கிறார் தெரியுமா.?
சென்னை : அடுத்த வாரம் கோட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், விஜய்சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றுள்ளார்.
‘GOAT’ படத்தின் வெளியீடு மற்றும் அரசியல் மாநாடு நெருங்கி வருவதால், விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றன. அடுத்த வாரம் (செப்.5) ‘தி கோட்’ திரைப்படம் வெளியாக உள்ளது. அதைத்தொடர்ந்து, தவெக கட்சி மாநாடும் செப்.23ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே, கடந்த 22ம் தேதி சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் முன்னிலையில், தவெக தலைவர் விஜய், தனது கட்சி கொடியை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, விஜய் சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆம், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் மகாராஷ்டிராவிலுள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றுள்ளார். விஜய்யின் இந்த ஆன்மிக பயணத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடன் இருந்தார். இதை வைத்து பார்க்கும்பொழுது, விஜய் தீவிர சீரடி சாய்பாபா பக்தர் போல் தெரிகிறது. விக்கிரவாண்டியில் திட்டமிடப்பட்ட அவரது முதல் அரசியல் மாநாடு மீது, அனைவரது பார்வையும் உள்ளது.
இந்நிலையில், அவரது தற்போதைய ஷீரடி பயணம் அவரது வரவிருக்கும் திரைப்படம் மற்றும் அரசியலில் நுழைவதற்கு ஆன்மீக பயணமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஒரு சாய்பாபா கோவிலின் பூசாரிகளுடன் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. அந்த கோவிலின் உரிமை குறித்து சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.
அதன்படி, சாய்பாபாவின் தீவிர சீடரான அவரது தாயார் ஷோபாவுக்காக ஒரு சாய்பாபா கோவில் விஜய்யால் கட்டப்பட்டதாக ஒரு தகவல் வேலையானது. சென்னையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கொரட்டூரில் நடிகருக்குச் சொந்தமான நிலத்தில் அந்த கோயில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.