விஜயை பரந்தூருக்கு வரவைத்த சிறுவன்.. அப்படி என்ன பேசினார் தெரியுமா?

ராகுல் என்ற சிறுவன் இந்தப் பரந்தூர் போராட்டம் பற்றிப் பேசியது மனதை ஏதோ செய்துவிட்டது. உங்களோடு நான் நிற்பேன்.

Parandur Protest

சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இன்று  வருகை தந்தார். அப்போது அவர் மக்கள் முன் பேசுகையில், “910 நாள்களாகப் போராடிக்கொண்டிருக்கிறீர்கள்.

ராகுல் என்ற சிறுவன் இந்தப் பரந்தூர் போராட்டம் பற்றிப் பேசியது மனதை ஏதோ செய்துவிட்டது. உங்களோடு நான் நிற்பேன். விவசாயிகளுடைய காலடி மண்ணைத் தொட்டுத்தான் என் அரசியல் பயணத்தைத் தொடங்கவேண்டும் என நினைத்தேன். அப்படித்தான் என் கள அரசியல் பயணம் இங்கிருந்து தொடங்குகிறது” என்றார்.

தற்போது விஜய் பரந்தூர் செல்ல வேண்டிய காரணம் என்னவென்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஜய், இந்த போராட்டம் குறித்து ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டதாகவும், அந்த குழந்தையுடைய பேச்சு தங்களுடன் நிற்க வேண்டுமென்ற எண்ணத்தை தனக்குள் ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார். யார் அந்த சிறுவன் ராகுல்? அவர் பேசியது என்ன என்பது குறித்து பார்ப்போம்.

விஜய் குறிப்பிட்ட அந்த சிறுவன் ராகுல், பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக முன்னதாக வீடியோ ஒன்றில் பேசியிருந்தார். அந்த வீடியோவில் பேசிய ராகுல், “எங்களுக்கு இந்த விமானம் நிலையம் வேண்டாம். எங்களுடைய விவசாய நிலங்களை விட்டா போதும். இந்த ஏரியையும், பள்ளிகளையும் அப்படியே விட்டால் போதும். அந்த விமானம் நிலையம் வேண்டாம். விமான நிலையம் வந்து நாங்கள் என்ன மேலயா பறக்க போகிறோம்?.

இந்த விமான நிலையம் வந்தால் நாங்கள் படிக்கும் பள்ளிகள் பாதிக்கப்படும். இந்த விமான நிலையம் வந்தால் எங்கள் ஏரிலாம் போயிடும், அவர்கள் பிள்ளைகளை மட்டும் படித்து பெரியாளாக வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படியென்றால் நாங்கள் படித்து பெரியாளாக வேண்டாமா? விவசாய நிலங்கள் இருந்தால் தான் நாங்கள் சாப்பிட முடியும். அதையும் எடுத்துக்கொண்டால் எப்படி? இதையும் அழித்தால் நாங்கள் என்ன செய்வோம்? என அந்த சிறுவன் பேசியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்