கோவை சிறுமி வழக்கில் நியமனம் செய்யப்பட்ட பெண் அதிகாரி யார் தெரியுமா .? .!
- கோவை மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அனந்தநாயகி சிறுமி வழக்கில் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
- அனந்தநாயகி இந்த வருடம் சிறந்த புலன் விசாரணை அதிகாரிக்கான பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் உள்ள பன்னிமடை பகுதியை சார்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அதே பகுதியை சார்ந்த சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமார் குற்றவாளி என கூறி கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் சந்தோஷ்குமாருக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் , 302 பிரிவின் கீழ் குற்றவாளி தூக்கு தண்டனையும் மற்றும் தடயத்தை மறைந்ததுக்காக 7 வருடம் சிறையுடன் ,ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டு தண்டனை வழங்கியது.
இதையெடுத்து சிறுமியின் தாய் கடந்த 26-ம் தேதி தனது மகள் வன்கொடுமை செய்யப்பட்டதில் மேலும் ஒருவர் தொடர்பு இருப்பதாக டிஎன்ஏ சோதனையில் தெரியவந்து உள்ளது. எனவே வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி கோவை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தகுதியான பெண் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்.பி.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன் படி எஸ்.பி சுஜித்குமார் தலைமையில் ஏடிஎஸ்பி அனிதா , ஏடிஎஸ்பி மணி ஆகியோரின் மேற்பார்வையில் கோவை மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அனந்தநாயகி சிறுமி வழக்கில் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சிறப்பு அதிகாரி அனந்தநாயகி இந்த வருடம் சிறந்த புலன் விசாரணை அதிகாரிக்கான பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.