மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.
கடலூர் ,கள்ளக்குறிச்சி,தருமபுரி, ஆரணி, சிதம்பரம்,கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளை அ.தி.மு.கவிடம் பாமக கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் கடலூர்,கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகியவற்றை தேமுதிகவும் கேட்பதாலேயே தொகுதி பங்கீடு முடியாமல் இழுபறி நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாமகவிற்கு இணையாக தேமுதிக தொகுதிகள் கேட்பதால் கூட்டணியில் சிக்கல் நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கூட்டணி தொடர்பாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தேமுதிக எங்கள் கூட்டணியில் இணையுமா, இணையாதா? என்பது ரகசியம்.விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…