சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவிடம் இன்று மாலை மீண்டும் பேசுகிறது தேமுதிக.
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமியை சந்தித்து தேமுதிக துணை செயலாளர் எஸ்.கே சுதீஷ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். நேற்று அமைச்சர் தங்கமணியுடனான பேச்சுவார்த்தையை தேமுதிக தரப்பினர் புறக்கணித்த நிலையில், மீண்டும் இன்று மாலை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
பாமகவுக்கு தரும் அங்கீகாரம் தங்களுக்கு தரப்படவில்லை என தேமுதிக தரப்பில் குற்றச்சாட்டி வருவதாக கூறப்படுகிறது. பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கியது போல் தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும் குறைந்தது 20 தொகுதிகள் வழங்க வேண்டும் என்றும் கூறி வருகிறது. ஆனால் அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 15 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
வரும் சட்டமனற்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடாததால் தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் வரை வழங்கப்படுவதாக அதிமுக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதிருப்தி அடைந்த தேமுதிக பேச்சுவார்த்தையை தவிர்த்து வந்தது. இதனிடையே, சுதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் கொட்டும் முரசு என பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது அதிமுக – தேமுதிக. இன்று நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் தேமுதிக எதிர்பார்த்த தொகுதிகள் ஒதுக்கப்படுமா அல்லது அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எதிரிபார்த்தது கிடைக்கவில்லை என்றால், மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி ஏற்படும் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…